புதிதாக 2,000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் பரீட்சையின் பெறுபேறுகளும் பரீட்சை திணைக்களத்தினால் பொதுநிர்வாக அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தகுதியான சுமார் 4,000 பரீட்சார்த்திகளை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.