யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியில் வீடு ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 8:00 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
மின்சார ஒழுக்கு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.