பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று கொழும்பு மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு சென்றுள்ளார்.
விசாரணையில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் வருகையையொட்டி உயர்நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.