வெள்ளவத்தை, மெரைன் ட்ரைவ் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
டி-56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையில் உள்ள பேர்ல் பீச் ஹோட்டலுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.