இலங்கை கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (27) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோளரங்கம் மூடப்படும்.
அன்றைய தினங்களில் பொதுக் கண்காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோளரங்கத்தின் புரொஜெக்டர்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோளரங்கம் மூடப்படும்.