யாழ் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று (25) பாரிய சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டர் கிட்டியுள்ளது.
குறித்த சுறா மீனுடைய மொத்த நிறை 3700Kg எனவும், நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.