பங்களாதேஷில் அழியும் அபாயத்தில் உள்ள யானைகளை தத்தெடுப்பதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யானைகளை தத்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்ப்பினால், இனி வனப்பகுதியில் உள்ள யானைகளை பிடித்து வளர்க்க முடியாது.
பங்களாதேஷில் தற்போது 200க்கும் குறைவான யானைகளே வாழ்கின்றன. அவற்றில் பாதியளவு யானைகள் சிறைபிடிக்கப்பட்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது.
அந்த விலங்குகளில் பெரும்பாலானவை சர்க்கஸ், தெரு நிகழ்ச்சிகள் அல்லது பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம்,சிறைபிடிக்கப்பட்ட யானைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.