சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
77 வயதான டபிள்யூ. குணவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவிசாவளை- புவக்பிட்டிய பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு வழிபாட்டிற்காக சென்ற யாத்திரிகர்கள் குழுவொன்று, நேற்று (25) இரவு வழிபாட்டை முடித்து விட்டு திரும்பிய போது குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.