இலங்கையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு 54 தரப்புகளிடமிருந்து யோசனைகள் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
12 பாடசாலைகள், 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய 2 நிறுவனங்களிடமிருந்து 8 திறந்த முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வீதி விபத்துக்கள் அடிக்கடி நிகழும் பகுதிகள் தொடர்பிலும் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.