யாகொட பிரதேசத்தில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இம்புல்கொட, இயல யாகொட, பெரக்கும் மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தலை மற்றும் நெற்றியில் இரத்தக்கறை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொலையின் போது அவருடன் மது அருந்திய மற்ற மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.