நாட்டின் சுகாதார சேவையில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது நாட்டில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாகவும், இதனை தடுக்க உரிய அதிகாரிகள் எந்தவித சாதகமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.