Wednesday, May 7, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிங்கனையில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது

மஹிங்கனையில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவர் கைது

மஹியங்கனை – குகுலாபொல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (21) சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

மூன்று இலட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து ஐநூறு மில்லிலீற்றர் கோடா அங்கிருந்ததாகவும், அவற்றை வடிகட்டுவதற்கு பயன்பத்தப்படும் சில உபகரணங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குகுலாபொல பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த காட்டில் சில காலமாக கசிப்பு உற்பத்தி செய்து வந்துள்ளதாகவும், அவற்றை வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மஹியங்கனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles