பெலியத்த பகுதியில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் உட்பட 13 பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று (21) இடம்பெற்ற மோதிலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவவிடம் வினவுவதற்கு நாம் முயன்ற போதும், அது பலனளிக்கவில்லை.