Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்விளையாட்டுஅனுஷ்கா - விராட் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

அனுஷ்கா – விராட் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி தாம் மீண்டும் பெற்றோர் ஆகியுள்ளதாக தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் தமது பதிவில்,

‘இதயம் நிறைந்த அன்போடும் அளவுகடந்த மகிழ்ச்சியோடும் நாங்கள் இதை அறிவிக்கிறோம். கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி எங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தியை உங்களிடம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் செல்ல மகன் அகாய்(யுமயயல), அதாவது வாமிகாவின் சகோதரனை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

எங்கள் வாழ்வின் இந்த அழகான தருணத்தில் உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம். அதேநேரத்தில் எங்களின் தனிமனித சுதந்திரத்தை மதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles