அனுராதபுரத்தில் 15 கிராம் ஹெரோயினுடன் ‘அக்கா’ என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஈஸி கேஷ் முறையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபடுவதாக அனுராதபுரம் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புத்தேகம – அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரேஷா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான எம்.ஜி.மஹிந்த குமார மற்றும் கொஸ்கொட தாரகவின் சகோதரரான கொஸ்கொட சுஜீவ ஆகியோரின் அனுராதபுரம் மாவட்டத்துக்கான ஹெரோயின் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்ணுக்கும், புஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.