வீட்டுக்குள் எலி புகுந்தது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவரும் எலியை துரத்திக் கொண்டிருந்த போது, இளைய சகோதரர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்த ஆரச்சியைச் சேர்ந்த அனுர கித்சிறி என்ற 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
