ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.
ஈரானிய ஜனாதிபதி அலுவலகம், எரிசக்தி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் குழுவொன்று, ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் இன்று தீவுக்குச் செல்லவுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.