உடரட்ட மெனிகே கடுகதி ரயில் இன்று (19) காலை ராகம ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
இன்று காலை 05.45 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் உடரட்ட மெனிகே கடுகதி ரயில் ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.