ஊவா பரணகம – ஹாலிஎல பிரதேசத்தில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள முள்ளங்கி தோட்டத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக பொருத்தியிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.