இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.