மன்னார் – தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் நேற்று மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வௌியிடப்பட்டது.
சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இப் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், நேற்று காலை 6.15 மணியளவில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.