Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடியுரிமை இழப்பு குறித்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து

குடியுரிமை இழப்பு குறித்து ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து

தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏழு வருடங்களாக தாம் குடியுரிமையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தம்மை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்பட்டுள்ளதாகவும்,
அதனால் தம்மால் அரசியல் பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமநாயக்க 2022 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles