அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தயாரிக்கப்படும் கூட்டணி பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.