ஹரிஹரன் இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நுழைவு சீட்டு மூலம் கிடைத்த வருமானம் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக நோர்தர்ன் யூனியின் தலைவர் இந்திரகுமார் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில், விளக்கமளிக்கும் விதமாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.