விசேடமாக இன்று (11) இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூட வேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸ் எச்சரிக்கிறது.
அதேவேளை, கொள்ளை அல்லது வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டால், அந்நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.