அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எந்தவொரு மட்டத்திலும் உள்ள எந்தவொரு நபரும் விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிவாரணத் திட்டத்தில் மாகாண சபை பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இன்று (13) நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாகப் பரிசீலிக்கப்பட்டு நலன்புரிப் பலன்களை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு உட்பட்டு ஆராயப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.