Monday, May 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பிரதமர் ஒப்புதல்

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பிரதமர் ஒப்புதல்

பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (12) அலரிமாளிகையில் முன்னாள் அமைச்சர் ஃபரியல் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் பெண்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்.

இதன்போது பல முஸ்லிம் வழக்கறிஞர்களை உள்ளடக்கிய தூதுக்குழுவினர், திருமண ஆணைச் சட்டம் 1908/ 19 முன்னுரையில், திருமணச் சட்டங்களில் இருந்து முஸ்லிம் பெண்களை விலக்கி வைத்துள்ளதாகவும், எனவே, முஸ்லிம் பெண்களும் இதே போன்ற உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்ய, அதைத் திருத்துவது அவசியம் என்றும் கூறினர்.

காலாவதியான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பிரதமர் ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் பெண்கள் குழுவில் ஹிஷ்யாமா ஹமின், ஹசனா செகு இசதீன், பாத்திமா சப்ரா ஜாஹிட், பாத்திமா அமானா மற்றும் சித்தி எர்மிசா தேகல் ஆகியோர் அடங்குவர்.

இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர் ஜயதிஸ்ஸ டி கொஸ்டா, மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பதிவாளர் நாயகம் சமந்த விஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles