Sunday, June 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசந்தேகநபர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட சம்பவம்: 7 பேர் கைது

சந்தேகநபர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட சம்பவம்: 7 பேர் கைது

கொழும்பு- ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் நஞ்சூட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலஹா – தெல்தோட்டை பகுதியில் வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி,ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொலைச் சந்தேக நபர்கள் இருவரை சந்திக்க சென்ற ஒருவர், அவர்களுக்கு சயனைட் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பால் பக்கற்றுகளை வழங்கியுள்ளார்.

அதனை அருந்தியதையடுத்து சுயநினைவிழந்த குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles