தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோக திணைக்களத்தின் பிரதிநிதிகள் பலரிடம் இவ்வாறான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.