முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (12) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (12) அதிகாலை 02.50க்கு இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-284 விமானத்தில் இந்தியாவின் புதுடெல்லி செல்லும் அவர், அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு பயணிக்கவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பேரணிகள் அங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியுடன் கட்சியின் இரண்டு அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.