Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்கம் கடத்திய பெண் கைது

தங்கம் கடத்திய பெண் கைது

விமான நிலையத்திலிருந்து சுமார் 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருவரே விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெயாங்கொடை – மிரிதியலந்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற வர்த்தக நிலையத்தின் கழிவறை ஒன்றில் வைத்து சந்தேக நபருக்கு மற்றுமொரு பெண்ணினால் நகைகள் மற்றும் ஜெல் தொகை அடங்கிய பொதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள நபரிடம் கொடுத்தன் பின்னர் அறுபதாயிரம் ரூபாவை தருவதாக உறுதியளித்தமையால் தான் இந்த பொதியை பெற்று வந்ததாக கைது செய்யப்பட்ட பெண் சுங்கம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண் ஊழியரை கைது செய்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles