2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் கால்பந்தாட்ட அணிகளுக்கு சர்வதேச போட்டிகளில் மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம மற்றும் ஃபீஃபா என அறியப்படும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.