ஆனமடுவ, தத்தேவ வீதியில் உள்ள மயானத்திற்கு அருகாமையில் நேற்று (08) இரவு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனமடுவ, பெத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரின் இடது கை பலத்த சேதமடைந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிளின்ட் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.