அவிசாவளை மற்றும் புறக்கோட்டை வீதியில் பயணிக்கும் 122 இலக்கம் கொண்ட பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (08) காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
ஹோமாகம டிப்போவின் அத்தியட்சகர் மற்றும் அவரது ஊழியர்கள் டிப்போவிற்கு சொந்தமான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கொடகமை பிரதேசத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத காரணத்தால் அவர்கள் பேருந்து சேவைகளில் இருந்து விலகியுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.