Tuesday, April 29, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஞ்சா தொடர்பான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை!

கஞ்சா தொடர்பான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை!

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும், ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவது தொடர்பிலான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதை சட்டமாக்குவதற்கான சட்டமூலம் சுதேச வைத்திய அமைச்சர் சிசிர ஜயகொடியினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் சமூகத்தில் வெவ்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்றன.

எவ்வாறாயினும் அமைச்சரவையில் அவ்வாறான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles