கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 785 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 596 சந்தேகநபர்களும் குற்றவியல் திணைக்களத்தில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் 189 சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 11 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 596 சந்தேக நபர்களில் 07 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.