Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச்சில் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்

மார்ச்சில் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்

எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் பயிற்சி முடித்த 590 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதுவரை காலமும் வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles