யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கார்கீவ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் கல்வி கற்ற கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யுக்ரைன் – ரஷ்யா இடையேயான யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த மாணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.