பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்று, அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர், பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட 3 இளைஞர்களும், 3 யுவதிகளும் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களை காப்பாற்றிய உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள், அவர்களுக்கு முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.