Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் இன்று முதல் மூடப்படவுள்ள வீதிகள்

கொழும்பில் இன்று முதல் மூடப்படவுள்ள வீதிகள்

கொழும்பில் உள்ள சில வீதிகள் மூடப்படவுள்ளன.

கொள்ளுப்பிட்டி, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுகளுக்கு அண்மித்த உத்தரானந்த மாவத்தை, பெரஹெரா மாவத்தை மற்றும் நவம் மாவத்தை ஆகிய வீதிகள் இன்று முதல் சில கட்டங்களின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீதிகளை அண்மித்த பகுதியில் நிலத்தடி குழாய் பொறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மாநகர பொறியியலாளர்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று(05) முதல் 19 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தையில் இருந்து ரயில் கடவை வரையிலான பகுதி மூடப்படவுள்ளது.

மேலும், பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையில் இருந்து பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி மூடப்படவுள்ளது.

அதன் மூன்றாம் கட்டத்தின் கீழ், மார்ச் 5 ஆம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரை உத்தரானந்த மாவத்தையிலிருந்து பெரஹெர மாவத்தைக்கு அருகிலுள்ள ரொட்டுண்டா கார்டன் சந்தியின் பகுதி வரை மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles