சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோடை விடுமுறையில் கடலோரப் பகுதியில் விடுமுறைக்கு சென்ற பலர் இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 43,000 ஹெக்டெயர் பரப்பளவில் தீ பரவியுள்ளதுடன், 3,000 முதல் 6,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
தீயினால் பாதிக்கப்பட்ட வினா டெல் மா உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.