வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறியும் நடவடிக்கையை இன்று (05) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் எடை மற்றும் அளவீடுகள் திணைக்களம் இந்த செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளன.
உரிய விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் எடையைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டது.