இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை இந்தியாவுக்கு சென்றார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அவர் உட்பட நால்வர் இன்று (05) காலை புதுடெல்லிக்கு பயணித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனுரகுமார திஸாநாயக்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கலாநிதி நிஹால் அபேசிங்க மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்திய உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளை அவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.