Thursday, August 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்துகமையில் ஒருவர் படுகொலை

மத்துகமையில் ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை – நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles