சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை நாளை காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35இ000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
