Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான அறிவிப்பு

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பான அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று(1) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தை முன்வைப்பார் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் தலைமை அதிகாரியுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

கொள்கை அறிக்கை மீதான விவாதத்தை எதிர்வரும் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (01) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு திணைக்கள தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles