Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவுக்கு பயணத் தடை

கெஹெலியவுக்கு பயணத் தடை

நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (31) ஆஜராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு வருகை தராமைக்கு முன்வைத்த காரணம் பொய்யானது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விடயங்களை ஆராய்ந்த மாளிகாகந்த நீதவான், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நாளை காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles