Tuesday, June 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவன் மர்ம மரணம் - மேற்பார்வையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

சிறுவன் மர்ம மரணம் – மேற்பார்வையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படும் என கல்முனை நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles