Sunday, May 3, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளைஞன் மர்ம மரணம்

ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளைஞன் மர்ம மரணம்

ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, வெவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் அறையில் இருந்த குறித்த நபரிடமிருந்து பதில் கிடைக்காமை குறித்து ஹோட்டல் நிர்வாகம் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளத. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரும் ஹோட்டல் ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ​​அந்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

வராகொட – களனி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles