Saturday, July 5, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 42 இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 42 இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

பொது நிர்வாக அமைச்சில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் 14 பேரிடம் இருந்து 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுநிர்வாக அமைச்சின் கடிதத் தலைப்பில் போலியாக தயாரிக்கப்பட்ட கடிதங்களை பயன்படுத்தி குறித்த நபர் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles